“இந்த பயங்கர நிலையில் இருத்தப்பட்டுங்கூட மனித உணர்ச்சி இப்படி இழிவுபடுத்தப்பட்டுங்கூட யாரும் ஆத்திரப்படாதது குறித்து அவருக்கு ஆச்சரியமாய் இருந்தது”.
புத்துயிர்ப்பு நாவலில் இருந்து லேவ் தால்ஸ்தாய் எழுதிய இந்த வரிகளில் ஆச்சரியப்பட்டதும் வருத்தப்பட்டதும் நிஜமாய் நான் இல்லை மதிப்பிற்குரிய தோழர் திவ்யா அவர்கள்.நானெல்லாம் இதை பற்றி கண்டும் காணாமல் வாழ்வதற்காக வெட்கப்படவேண்டும். படத்தின் முதல் காட்சியில் “கள்ள மௌனத்திற்கு” என்று சமர்ப்பிக்கப் படுகிறது. உண்மையில் அது கள்ள மௌனம் மட்டுமல்ல ஒரு பிடிவாதமான மௌனமும் கூட. “இப்படியெல்லாம் கூட பேர் வைப்பாங்களா?” என்று கேட்கிறார் என் சித்தி. பிடிவாதமான மௌனத்தின் மூலமாக இது போன்ற அவலங்களை ஒதுக்கி மறந்து கடக்க முயற்சிக்கும் என்னை போன்றோரின் கிண்டலான கேள்வி அது.
இந்த சமூகத்தில் ஒரு சாரார் மலம் அள்ளுவதை, அதுவும் வெறும் கையால் ஆம் வெறும் கையால் அள்ளும் அவலத்தை இத்தனை நாட்களாக நேரில் நான் பார்த்துவிடக்கூடாது என அஞ்சிய அந்த தொழிலை செய்வோரின் வாழ்வை ஆவணப்படுத்தியிருக்கிறது கக்கூஸ் ஆவணப்படம். அவர்கள் அள்ளுவதை காட்சியாய் பார்க்கும்போதே எனக்குள் குமட்டல் எடுத்துவிட்டது. அவர்கள் வாழ்வையே அந்த மலக்குழிக்குள் தள்ளியிருக்கிறோம். இந்த சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனாய் இதற்கு நான் வெட்கப்படுகிறேன். இதை மாற்ற இத்தனை நாள் யோசிக்க கூட இயலாத என் கையாலாகாத்தனத்திற்கு யாதொரு தண்டனையும் தகும்.
இந்த சமூகமும் அரசும் ஒரு சாராரை இப்படி வாழ வைப்பதை தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது. அதை நிரூபிப்பது போல அவர்களுக்கு உதவுவதற்கு கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரத்தையும் விலை அதிகம் என அரசு நிராகரிக்கிறது. எந்த மாவட்டத்திலும் இந்த அவலம் நிற்க வில்லை. ரோட்டோரமாயினும் சரி, பொது கழிப்பிடமானாலும் சரி எதுவாயினும் துப்புரவு தொழிலாளியே கையுறை கூட இல்லாமல் சரியான எந்த உபகரணமும் இல்லாமல் அதை சுத்தம் செய்ய வேண்டி இருக்கிறது. மனிதக்கழிவு மாத்திரம் அல்ல இறந்து போன நாய் பூனை எலி ஏன் அநாதை பிணமாயினும் அவர்கள் தான் அதை எடுத்து போட்டு சுத்தம் செய்கிறார்கள். எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஒரு இறந்து போன மனிதரை வெறும் கையால் தூக்கி கொண்டு போனதை சொல்கிறார் ஒரு துப்புரவு தொழிலாளி. HIV +ve மிக மிக மிக குறைந்த அளவுள்ள ஒரு மனிதருக்கு சிகிச்சை செய்ய எவ்வளவு பாதுகாப்பு உபகரணங்களோடு போவார்கள் என பார்த்திருக்கிறேன். அவ்வளவு ஏன் சாதாரண நோயாளியின் ஒரு துளி ரத்தமாயினும் இல்லை அவர்களை தொடுவதாயினும் கையுறை, ஸ்ட்டர்லியம் இல்லாமல் அணுக மாட்டார்கள். ஆனால் நம் துப்புரவு தொழில் நண்பர்கள் பெண் தோழர்கள் இங்கே வெறும் கையால் வேலை செய்வதை கண்டும் காணமல் செல்கிறேன் நான். நகராட்சித்துறை, தனியார் ஒப்பந்தக்காரர்கள், நீதித்துறை, எதுவும் அவர்களுக்கு சாதகமாய் இல்லை. மலக்குழி மரணங்களை பற்றிப் பேசும்போது திவ்யா அவர்கள் அதை மலக்குழி கொலைகள் என குறிப்பிட சொன்னார். இது அரசு செய்யும் கொலை என்றார். அரசு மக்களுக்காக மக்களை கொண்டு மக்களால் நடத்தப்படும் ஜனநாயகம் எனில் இந்த மக்களில் ஒருவனான நானும் ஒரு கொலை குற்றவாளியே.
ஒருமுறை மக்கள் கவிஞர் சுகிர்தராணி ஒரு உரையில் குறிப்பிடும்போது தமிழில் மன்னிப்பு கோரும் இலக்கியம் ஒன்று இல்லை என்ற சொன்னார். இந்த பதிவு இலக்கியமல்ல. ஆனால் இந்த நாட்டை சுத்தம் செய்ய நாம் பலி கொடுத்துக் கொண்டிருக்கும் துப்புரவாளர்களிடம், அரசு செய்யும் இந்த கொலைகளுக்கு உடந்தையாய் இருந்ததற்காக அவர்கள் குடும்பத்திற்கும் எழுத்தின் மூலமாக என் மன்னிப்பை கோருகிறேன்.

No comments:
Post a Comment