நான் டயாலிஸிஸ் வாழ்க்கை முறையில் இருந்த ஒரு காலகட்டத்தில் ஒருநாள் நடந்தது.
டயாலிஸிஸ் வார்டை HB(hepatitis b) நெகட்டிவ் பாசிட்டிவ் என இரண்டு யூனிட்களாக பிரித்திருப்பார்கள். பாசிட்டிவில் இருக்கும் மெஷின்களை நெகட்டிவ்க்குள் பயன்படுத்தமாட்டார்கள். பெரும்பாலும் எல்லா மெஷின்களும் occupied ஆக இருக்கும்.
ஆனால் பாசிட்டிவில் எப்போதும் ஒரு மெஷின் மட்டும் எப்போது பார்த்தாலும் பயன்படுத்தாமல் காலியாக இருக்கும். ஒருமுறை டெக்னீஷியனிடம் கேட்டேன்.
ஏன் ஸிஸ்டர் அந்த மெஷின் யூஸ் பன்னாம இருக்கு?
அது hiv பாஸிட்டிவ் இருக்கிறவங்களுக்கானது சார்.
யாராவது வருவாங்களா?
ஹ்ம்ம் ஒருத்தரு வருவாரு! நீங்க வர்ற நேரத்துல வரமாட்டாரு.
ஓ என்றபடியே அந்த மெஷின் அருகில் இருந்த பெட்டை பார்த்தேன். ஒருமாதிரி cushion சேர் மாதிரி இருந்தது.
சிலநாட்கள் சென்ற பிறகு ஒருநாள் யூனிட்டில் படுக்கை தட்டுப்பாடு. அந்த cushion chairஐ போட்டு என்னை அதில் உட்கார்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்ள சொன்னார்கள். ஒரு நொடி ஸிஸ்டரை தயங்கிப் பார்த்தேன்.
என்ன?
இல்லை இது அந்த HiV பாஸிட்டிவ் மெஷின் கூட இருக்குமே அந்த சேர் தானே?
ஆமா. அதுக்கென்ன?
ஒன்னுமில்லை ஸிஸ்டர்! என்றேன் தயக்கமாய்.
சார் இதுல புதுபெட்ஷீட் போட்ருக்கேன். Hiv வைரஸ் பெட்ஷீட் மூலமா எல்லாம் பரவாது. இன்னமும் உங்களுக்கு டவுட்னா வேற பெட்ல...
எனும்போதே வேண்டாம் என்றபடி அதில் அமர்ந்து கொண்டேன். டயாலிஸிஸ் ஸ்டார்ட் ஆனது.
டயாலிஸிஸ் ஆரம்பித்த அரைமணி நேரம் கழித்து ஸிஸ்டர் என்றேன்.
அருகில் வந்து என்ன என்றார்.
ஒன்னுமில்லை.. hiv பத்தி நீங்க சொன்னது எனக்கும் தெரியும். ஆனா ஒரு நிமிஷம் "படிச்சத பயம் சாப்டுருச்சு".
உண்மைதான் சார். உங்க பயம் தப்பில்ல ஆனா அந்த பயத்தை உதறிதள்ளதானே சார் படிக்கிறோம்.
"சாரி ஸிஸ்டர்" என்றேன். "பரவாயில்லை சார் வேற ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுங்க."
சிரித்தபடியே அடுத்த பேஷன்டை நோக்கி போனார். எனக்கு தான் என்ன நாமெல்லாம் படித்து கிழித்தோம் என்றிருந்தது.
இன்றைக்கு ஒரு மருத்துவரை அடக்கம் செய்ய மறுத்த சம்பவத்தை படித்தபோது ஸிஸ்டர் சொன்னதை நினைத்துக் கொண்டேன். பயம் மனித இயல்புதான் ஆனால் அதை களைந்து மனிதத்தை கடைபிடிக்க தானே இவ்வளவு படிப்பு அறிவு எல்லாம் தேவைப்படுகிறது. அதற்கு தானே படிக்கிறோம்!
"Being human is not a state. It's a practice."
No comments:
Post a Comment